ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தையாத் பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 20 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெய்சால்மரில் தனியார் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்சால்மர் பேருந்து தீப்பற்றிய விபத்தில் காயமடைந்து ஜோத்பூர் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் பஜன்லால் சர்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சை நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.