Also Watch
Read this
Posted on: Jan 23, 2026 07:07 AM
By: Manigandan Raja
தேர்தல் சீசன் வந்தால் மட்டும் தமிழ்நாட்டின் பக்கம் அடிக்கடி பிரதமர் மோடி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியை தான் தரும் என்றும் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
தேசிய ஜனநாயக கூட்டணியின் துரோகங்களை தமிழகம் நினைத்துப் பார்க்கிறது. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?. மக்களவைத் தொகுதி மறுவரையறையின் கீழ், தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?.
நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் விபி ஜிராம்ஜி கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்?. பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பாஜக அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?. இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?. ஒசூர் விமான நிலையம், கோவை - மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத் தான் தரும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved