news-tamil-logo

3/16/2026, 6:21:41 PM

news-tamil-logo
more
Home news அமைதிக்கு அச்சுறுத்தல் பயங்கரவாதம் என பிரதமர் மோடி திட்டவட்டம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

அமைதிக்கு அச்சுறுத்தல் பயங்கரவாதம் என பிரதமர் மோடி திட்டவட்டம்

தியான்ஜின், சீனா

Posted on: Sep 01, 2025 10:51 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
modi

கடந்த 40 ஆண்டுகளாக, பயங்கரவாதத்தால், பெருமளவில் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதாக ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சனையல்ல, அமைதியை விரும்பும் உலக ஒற்றுமைக்கு முன் உள்ள பெரும் அச்சுறுத்தல் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனாவில் ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:


ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி. வரவேற்பு அளித்த சீன அதிபருக்கு நன்றி. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா சாதகமான பங்கு வகித்து வருகிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு, அமைதி முக்கியம். பயங்கரவாதம் மனித குலத்திற்கு சவாலாக உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை எஸ்சிஓ என்பது,
எஸ் - பாதுகாப்பு
சி - இணைப்பு
ஓ - வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.


பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையை இந்தியா வலியுறுத்துகிறது, குரல் கொடுக்கிறது.

நான்கு தசாப்தங்களாக பயங்கரவாத தாக்கத்தை இந்தியா சுமந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த போது இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த நட்பு நாடுகளுக்கு நன்றி.

ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், பாதுகாப்பு, அமைதி, நிலைத்தன்மை அவசியம். ஆனால் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

பயங்கரவாதம் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கே ஆபத்து. பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மையே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு காரணம்.

இந்த வழியில், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை, இந்தியா வலியுறுத்துகிறது.

பஹல்காமில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. சில நாடுகள் வெளிப்படையாக பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.


பயங்கரவாதத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது. பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. அதை எல்லா வடிவங்களிலும் கண்டிக்க வேண்டும். இந்தியா இன்று, சீர்திருத்தம், செயல்திறன் ஆகியவற்றை பின்பற்றி முன்னேறி வருகிறது.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற நாங்கள் முயற்சி செய்துள்ளோம்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சி தருகிறது. போதைப்பொருள் கடத்தல், சைபர் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 59 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved