போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் நுரையீரலின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது நோயின் தீவிரம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் இன்னும் ஒரு வாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.