இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் இன்று தேசிய ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னரும் சிதறிக் கிடந்த இந்தியாவை, தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் சீர்படுத்திய வல்லபாய் படேல் "IRON MAN OF INDIA" என அழைக்கப்படுகிறார். படேலின் தேசிய ஒற்றுமை பற்றிய தொலைநோக்கு சிந்தனை, இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்காகவும், பன்முகத்தன்மைக்காகவும் பெரும் பங்காற்றிய வல்லபாய் படேலை கௌரவிக்கும் விதமாக, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி உறுதிமொழி ஏற்பு:இந்தியாவின் முதல் துணை பிரதமர் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் நர்மதா நதியின் குறுக்கே உள்ள STATUE OF UNITY என அழைக்கப்படும் படேலின் பிரம்மாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஹெலிகாப்டர்களில் இருந்து வல்லபாய் படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி பிரதமர் மோடி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.இதையும் பாருங்கள் - Sardar Vallabhbhai Patel | வல்லபாய் படேல் பிறந்தநாள்.. ஒற்றுமைக்கான சிலைக்கு பிரதமர் மரியாதை