புதிய மாடல் ஹோண்டா அமேஸ் காரின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்தியாவில் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கும் காரின் உள் மற்றும் வெளிப்புற தோற்றத்தின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. ஹோண்டாவின் இந்த புதிய மாடல் கார், மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் உள்ளிட்ட மாடல் கார்களுக்கு எதிராகக் களமிறங்கும் எனத் தெரிகிறது.