Also Watch
Read this
Posted on: Apr 23, 2025 01:04 AM
By: Srini Vasan

இறுதிச் சடங்கிற்கு முன்னதாக போப் பிரான்சிஸ் சவப்பெட்டியில் இருக்கும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரன்சிஸ் உடல்நலக் குறைவால் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரது உடல் சாண்டா மார்த்தா தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமைக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் திறந்த சவப்பெட்டியில், சிவப்பு அங்கி அணிந்து, தலையில் பாப்பல் மிட்டர் ((papal mitre)) கையில் ஜெபமாலையை அணிந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை வாடிகன் வெளியிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved