திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத குருவார தேய்பிறை பிரதோஷ தினத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்ற பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாதீபாரதனையும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டனர்.