மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா வரும் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, 16 ஆம் தேதி சூரசம்ஹார லீலை, 18-ஆம் தேதி முருகன் திருக்கல்யாண வைபவம் 19 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.