ஒரு லட்சம் பேரை திரட்டி போராடத்தில் ஈடுபடுவேன் என கூறிய லிப்ஸ்டிக்ஸ் மாதவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு இணையாக உதட்டுச் சாயம் பூசியதற்காக தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது .லிப்ஸ்டிக் விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவியின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறதுஅந்த வீடியோ கடந்த மே மாதம் பேசியது எனவும் வேண்டும் என்றே அந்த வீடியோவை இப்போது வெளியிட்டு உள்ளதாகவும் மாதவி தெரிவித்துள்ளார்சென்னை மாநகராட்சியின் முதல் தபேதராக பணியாற்றி வந்த மாதவி மணலி மண்டலத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த பணியிடை மாற்றம் லிப்ஸ்டிக் அதிகமாக பயன்படுத்தியதால் தான் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சை வெளியான நிலையில் தற்போது மாதவி சாலையில் நின்று பேசும் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து மாதவியிடம் பேசிய போது இந்த காணொளி கடந்த மே மாதம் பேசியது என்றும் அதில் கூறப்படும் தீபா என்பவர் என குடும்ப நண்பர் என மாதவி தெரிவித்துள்ளார். மேலும் தனது நண்பராக உள்ள தீபாவிற்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது எனவும் இது குறித்து தான் சாலையில் நின்று பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த காணொளி கடந்த மே மாதம் பேசியது எனவும் இப்போது வேண்டும் என்றே தீபாவின் கணவர் இதை இப்போது நடந்தது போல வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இருவரையும் சேரத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் பேசியது இப்போது வெளியிாகி உள்ளது.தீபாவிற்கு இரண்டு பெண் குழுந்தைகள் உள்ளனர் என்றும் அவரது கணவர் அவர்களை மிகவும் துன்புறுத்தி வருவதாகவும் தீபா தெரிவித்தார் என கூறிய மாதவி அப்போது எடுத்த காணொளி தான் இது எனவும் மேலும் இது முழு காணொளி இல்லை என்றும் பாதி மட்டும் வெட்டப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது எனவும் மாதவி தெரிவித்துள்ளார். தன்னை இனி ஊடகம் முன்பாக பேச கூடாது என மாநகராட்சி தரப்பில் இருந்து கூறி உள்ளதால் இதை பற்றி தற்போது நேரில் பேட்டி கொடுக்க முடியாது என கூறினார். மேலும் தீபாவின் கணவர் தான் இந்த காணொளியை வேண்டும் என வெளியிட்டுள்ளார் எனவும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் மாதவி தெரிவித்துள்ளார்.