ஹரியானாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை வழக்கில், உடலை சூட் கேசில் வைத்து அவரது நண்பர் இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 1ஆம் தேதி ரோஹ்தக் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த சூட் கேசில் இருந்து காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது நண்பன் சச்சின் கைது செய்யப்பட்டான்.