நேபாள மின்சார ஆணையத் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இமயமலையில் 18 மணி நேர மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தவராக கருதப்படும் மின்சார ஆணையத் தலைவர் குல்மான் கிசிங்கினின், மோசமான செயல்திறனைக் காரணம் காட்டி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து காத்மாண்டுவில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில், போராட்டக்காரர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்றனர்.