சினிமா மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் திரையரங்கில் இடைவேளை (interval) விடக்கூடாது என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, தமிழ்நாட்டில் ஆண்கள் அடிமையாக இருக்க முதலமைச்சர் தான் காரணம் என மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை சுட்டிக்காட்டி நகைச்சுவையாக பேசினார்.