வேலியண்ட் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் இளையராஜா இயற்றிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டன் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில், 80-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் வாசிக்க இளையராஜாவின் சிம்பொனி இசைக்கப்பட்டது. இவரது இசையை கேட்க, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ரசிகர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.