Also Watch
Read this

எம்.எஸ்.தோனி இந்த சீசனில் CSKவின் பிளேயிங் லெவனிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னை அணி தற்போது சரியான சமநிலையைக் கண்டிருப்பதுடன், பிளே-ஆஃப் சுற்றுப் போட்டியில் நீடித்து வருவதால், தோனியின் சாத்தியமான மறு வருகையானது அவருக்கான ஒரு பிரியாவிடை ஆட்டமாக மட்டுமே அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூருக்கு எதிரான போட்டியில் பாண்டியா இல்லை
வரும் 10ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான லீக் போட்டியில் மும்பை அணியில் கேப்டன் ஹர்டிக் பாண்டியா இடம் பெறுவதும் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக அவர் பங்கேற்பது சிரமம் என கூறப்படுகிறது.

காயம் காரணமாக வெளியேறிய சிஎஸ்கே வீரர் கோஷ்
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராமகிருஷ்ணா கோஷ்-க்கு பதில் அடுத்து வரும் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ் Sam Konstas விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது ராமகிருஷ்ணாவுக்கு வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

சஞ்சு சாம்சன் தலைசிறந்த டி-20 வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் தலைசிறந்த டி-20 வீரர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்தார். கடந்த டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து சஞ்சுவின் ஆட்டத்தை பார்த்து வருவதாகவும், அவரின் போராட்ட குணத்தை கண்டு ஆச்சர்யமடைந்ததாகவும் அவர் கூறினார்.

சதம் அடிக்க வேண்டும் என நினைக்கவில்லை - சஞ்சு
அணிக்காக போட்டியை வெல்வதுதான் முக்கியம் என சென்னை சூப்பர் கிங்கிஸின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 87 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். சதம் அடிப்பது எப்போதும் சிறப்பானது என்றும், ஆனால் அதற்காக தாம் கொஞ்சம் சுயநலமாக நடந்திருக்க வேண்டியிருக்கும் என்றார்.

பும்ரா பணிச் சுமையுடனே ஐபிஎல்-ல் விளையாடுகிறார்
பும்ரா கடந்த 12 மாதங்களாக இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி விட்டு, தற்போது பணிச் சுமையுடனே ஐபிஎல் போட்டியிலும் களமிறங்கியுள்ளதாக ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். அவரது தடுமாற்றத்துக்கு உடல்ரீதியாக மட்டுமல்ல, மனதளவிலும் மிகவும் சோர்வாக இருப்பது முக்கிய காரணம் என அவர் கூறியுள்ளார்.

அகமதாபாத் மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி
வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள qualifier 1 தரம்சாலாவிலும், 27 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள eliminator மற்றும் qualifier 2 போட்டிகள் புதிய சண்டிகரிலும் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved