சாலையோர மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கார். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர். காருக்குள் கருகிய நிலையில் கிடந்த தாய், மகள். காரில் இருந்து கிடைத்த சந்தேகத்திற்கிடமான பொருட்களை வைத்து விசாரணையை தொடங்கிய போலீஸ். உயிரிழந்த பெண்ணின் சகோதரரின் மீது திரும்பிய சந்தேகம். கஸ்டடியில எடுத்து விசாரித்தபோது வெளியான திடுக்கிடும் தகவல். பெற்ற தாயும், சகோதரியும் கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன? சாலையோர மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்சாலையோரத்துல உள்ள மரத்துல மோதி கார் ஒன்னு பயங்கரமா எரிஞ்சுட்டு இருந்தத பாத்த பொதுமக்கள், பதறியடிச்சுக்கிட்டு அங்க ஓடி வந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், தண்ணீர பீய்ச்சி அடிச்சு தீய அணைச்சுருக்காங்க. அடுத்து கார்குள்ள யாராச்சும் இருக்காங்களான்னு பாத்தப்ப, ரெண்டு பெண்கள் உடல் ஃபுல்லா கருகிப்போன நிலையில சடலமாக கிடந்துருக்காங்க. அடுத்து இத ஆக்சிடண்ட் வழக்கா பதிவு செஞ்ச போலீஸ், உயிரிழந்த ரெண்டு பேர் யாரு, எந்த பகுதிய சேந்தவங்கன்னு விசாரிச்சுருக்காங்க. அதுல தான் உயிரிழந்தது, சி.ஐ.டி பிரிவுல காவலராகப் பணியாற்றிய சரப்ஜித் கவுர்-ங்குற பெண் மற்றும் அவரது தாய் இந்தர்ஜித் கவுர்ன்னு தெரியவந்துச்சு.குர்பிரீத் சிங்கிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ்அடுத்து சரப்ஜித் கவுரோட சகோதரர் குர்பிரீத் சிங் கிட்ட நடந்த சம்பவத்த சொன்ன போலீஸ், அவர நேர்ல வரவச்சுருக்காங்க. அப்ப அவரோட நடவடிக்கையில போலீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கு. அதுக்கடுத்து விபத்து நடந்த ஸ்பாட்டுக்கு வந்த தடயவியல் துறை நிபுணர்கள காரை ஆய்வு பண்ணிருக்காங்க. அப்ப கார்குள்ள இருந்து சில சந்தேகத்திகிடமான பொருட்கள் கிடைச்சதா கூறப்படுது. இதனால இத விபத்து இல்லை, சரப்ஜித் கவுருக்கும் அவரது தாய் இந்தர்ஜித் கவுர்க்கும் வேற ஏதோ நடந்துருக்குன்னு கண்டுபிடிச்ச போலீஸ், அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு பண்ணிருக்காங்க. ஆனா அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல. இதனால குர்பிரீத் சிங் கிட்ட போலீஸ் விசாரிச்சுருக்காங்க. நேத்து நைட்டு தான் இந்த விபத்து நடந்துருக்கு, அந்த நேரத்துல நீங்க எங்கருந்திங்கன்னு கேட்ருக்காங்க. அதுக்கு அவர் நான் வீட்ல இருந்தன்னு சொல்லிருக்காரு.முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த குர்பிரீத் சிங்ஆனா, இத நம்பாத போலீசார், விபத்து ஏற்பட்ட நேரத்துல குர்பிரீத்தோட செல்போன் சிக்னல் எங்க பதிவாகியிருந்துருக்குன்னு செக் பண்ணிருக்காங்க. அதுல சிக்னல் டவர் விபத்து ஏற்பட்ட சுலர்கராத் சாலையில காட்டிருக்கு. குர்பிரீத் சிங்கோட முன்னுக்கு பின் முரணான தகவல வச்சு அவர கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. அதுல தான் பல பகீர் தகவல்கள் வெளியாகிருக்கு. தாய்க்கும் மகனுக்கும் இடையே நீடித்த சொத்து தகராறுபஞ்சாப் சங்ரூர் பகுதியை சேந்தவரு ஹெட் கான்ஸ்டபிள் குர்பிரீத் சிங். இவரு தனது தாய் இந்தர்ஜித் கவுர் கூடவும் சகோதரி சரப்ஜித் கவுர் கூடவும் வசிச்சுட்டு இருந்தாரு. இதுக்கிடையில தாய் இந்தர்ஜித் கவுருக்கும், மகன் குர்பிரீத் சிங்கிற்கும் அடிக்கடி சொத்து தொடர்பான பிரச்னை ஏற்பட்டுட்டே இருந்துருக்கு. குர்பிரீத் சிங், தாய் பேருல இருந்த மொத்த சொத்தையும் தன்னோட பெயருக்கு மாத்தி தர சொல்லி சண்டை போட்டதா கூறப்படுது.காரை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்அதுக்கு தாய், உனக்கு மட்டும் எப்படி மொத்த சொத்தையும் தர முடியும், உன் சகோதரிக்கும் அதுல பங்கு இருக்கு, அதனால ரெண்டு பேருக்கும் சரிக்கு சமமா தான் சொத்த பிரிச்சு தருவேன்னு சொல்லிருக்காங்க. இதனால கடும் கோபமான குர்பிரீத், தாய் மற்றும் சகோதரிய கொலை செஞ்சு, மொத்த சொத்தையும் தன்னோட பேருக்கு மாத்திக்கிற திட்டம் போட்ருக்காரு. அதுபடி நைட்டு நேரத்துல வீட்ல இருந்த தாயவும், சகோதரியவும் கண்மூடித்தனமா தாக்குன குர்பிரீத் ரெண்டு பேரையும் அடிச்சே கொலை பண்ணிருக்காரு. அடுத்து நைட்டோட நைட்டா ரெண்டு பேரோட சடலங்களையும் கார்குள்ள போட்ட குர்பிரீத், கார் மூலமா சூலர் கராத் - சாகர் சாலைக்கு கொண்டு போய்ருக்காரு. அடுத்து சாலையோரத்துல உள்ள மரத்துல கார மோதவிட்டு, சடலங்கள் மேலையும், கார் மேலையும் பெட்ரோல ஊத்தி தீ வச்சு கொளுத்திட்டு அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாரு. ஆனால குர்பிரீத்தோட முன்னுக்கு பின் முரணான தகவல் மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் அவர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link அம்பலமான அரசு ஊழியரின் வேஷம்