‘நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், தங்களது எக்ஸ் பக்கத்தில் சுந்தர்.சி படத்துடன் போஸ்டர் வெளியிட்டுள்ளது. 'அரண்மனை' பட வரிசையில் வெளியான நான்கு பாகங்களையும் இயக்கிய அனுபவம் கொண்டவர் சுந்தர் சி என்பதால், அவர் இயக்கவுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.