பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய 3 பேரின் மொத்த உருவமாக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், "கவிதை மழை" என்கிற நூலை வெளியிட்டார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா நடைபெறுவதாகவும், சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் போல எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடித்தால் எதிர்க்கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்று தாம் முதல்வரிடம் சொல்வேன் என்றும் கூறினார்.