news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

சபரிமலை, கேரளா

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sabarimala

சபரிமலையில், இன்று மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி, பிற்பகல் 2.45 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி பூஜைகளும் பிறகு, பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரண பெட்டி சன்னிதானத்தை வந்தடைந்ததும், சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.
மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதால், நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலையில் மகர விளக்கு தரிசனத்தை காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார். எருமேலி பாதை வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையை அடைந்து வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸார் தயாராக உள்ளதாகவும் கூறினார். இதையும் பாருங்கள் - இன்றைய ராசிபலன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved