ரஷியாவில் பீர் பிராண்ட் ஒன்று தனது பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாத்மா காந்தி உருவம் பொறித்த இந்த பீர் கேன்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பீர் கேன்களில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.