ஆந்திராவில், திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளம்பெண், கள்ளக்காதலன் குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்று, தன் மீது நெருப்பு பற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்காதலன் பேசாமல் இருந்த ஆத்திரத்தில் குடும்பத்தையே காவு வாங்க முடிவு செய்த கோரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திருமணத்தை மீறிய உறவுஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சுத்தப்பள்ளியை சேர்ந்த 30 வயதான மல்லேஷ் என்பவருக்கும், தெனாலி சி.எம்.காலனியை சேர்ந்த 28 வயதான துர்காவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. ஆட்டோ ஓட்டி வந்த மல்லேஷுக்கும், தேன் வியாபாரம் செய்து வந்த துர்காவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட அடிக்கடி தனிமையில் சந்திப்பது நெருக்கமாக இருப்பது என பழக்கம் எல்லை மீறி சென்று இருக்கிறது. ஆனால், சில மாதங்களிலேயே தேன் வியாபாரி துர்கா மீது மல்லேஷுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. தேன் விற்க செல்லும் போது வேறு சில ஆண்களுடன் துர்கா தொடர்பில் இருப்பதாக மல்லேஷுக்கு தகவல் வர, துர்காவின் நடத்தை மல்லேஷுக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. நெருக்கத்தை குறைத்துக் கொண்ட மல்லேஷ்இதனால், துர்காவுடனான நெருக்கத்தை குறைத்துக் கொண்ட மல்லேஷ், ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத துர்கா, 3 நாட்களுக்கு முன்பு மல்லேஷை சந்தித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வாக்குவாதம் கை கலப்பாக மாற ஸ்குரூடிரைவரால் குத்தி மல்லேஷை காயப்படுத்திய துர்கா, காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். காவல் நிலையம் சென்ற பஞ்சாயத்துபோலீஸ் அழைத்து இருவரையும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்த நிலையில், ஆத்திரம் தீராமல் இருந்த துர்கா, எப்படியாவது மல்லேஷை வழிக்கு கொண்டு வர வேண்டும் என யோசித்து கொடூர முடிவை எடுக்க துணிந்திருக்கிறார். அதாவது, மல்லேஷின் குடும்பத்தினரை TRUMP CARD ஆக வைத்து மல்லேஷை மிரட்டி வழிக்கு கொண்டு வர திட்டம் தீட்டியிருக்கிறார் துர்கா. மல்லேஷ் குடும்பத்தினர் மீது பெட்ரோல்...இந்த நிலையில், சம்பவத்தன்று ஐந்து லிட்டர் கேன் நிறைய பெட்ரோலை நிரப்பிக் கொண்டு மல்லேஷ் வீட்டுக்குச் சென்ற துர்கா, வீட்டில் இருந்த மல்லேஷின் குடும்பத்தினர் மீது பெட்ரோலை ஊற்றியதாக கூறப்படுகிறது. மல்லேஷின் தாய், மனைவி, மகன் ஆகிய மூன்று பேர் மீதும் பெட்ரோலை ஊற்றிய துர்கா, செல்போனில் மல்லேஷை அழைத்து உடனடியாக வீட்டுக்கு வரவில்லை என்றால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. தான் பற்ற வைத்த தீயில்...மிரட்டும் போதே, துர்கா லைட்டரை பற்ற வைக்க மளமளவென தீ பரவியிருக்கிறது. இதில், பெட்ரோலுடன் இருந்த துர்கா மீதும், மல்லேஷின் குடும்பத்தினர் மீதும் தீ பற்ற, அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த அக்கம் பக்கத்தினர் 6 பேர் மீதும் தீ பற்றியிருக்கிறது. இதில், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் இருந்த துர்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மல்லேஷின் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Related Link இன்ஸ்டா காதலால் பறிபோன உயிர்