ரிஷப் பண்ட் போல தங்களுடைய அணியிலும் இந்தியாவை அடித்து நொறுக்க டிராவிஸ் ஹெட், மிட்சேல் மார்ஷ் இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்பாக பேசிய அவர், 2023 உலகக் கோப்பை பைனலில் மொத்த இந்தியாவையும் சைலன்ட் செய்தது போல ரிஷப் பண்ட்டை அமைதியாக வைத்து வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.