Also Watch
Read this
By: Manigandan Raja
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது;
* தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் 5,40,511 மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தங்கம் தென்னரசு, தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved