கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே, நிலபிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமந்தன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கலா. இவருக்கு சொந்தமான பொதுநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுசுவர் கட்டியுள்ளார். இந்நிலையில் இந்த நிலம் தொடர்பாக இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த சக்திவேல் அவரது உறவினர்களுடன், கலா மற்றும் அவருடைய குடும்பத்திரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை கலா குடும்பத்தினர் வீடியோவாக பதிவு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.