தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். துர்கா, லட்சுமி, சரஸ்வதி கோவில் கும்பாபிஷேகம் சென்னை, போரூர் மதனந்தபுரம் ஸ்ரீ துர்கா, லட்சுமி, சரஸ்வதி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பூலாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் ராமநாதபுரம் மாவட்டம், பூவளத்தூர் பூலாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்பி ஜோதிமணி, பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஞானபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா திருவண்ணாமலை மாவட்டம், மாதலம்பாடி ஞானபுரீஸ்வரர் கோவிலில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக 4 கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவில் விமானங்களுக்கு ஊற்றப்பட்டது.பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்மதுரை, பழங்காநத்தம் பசும்பொன் நகர் பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் மதுரை ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு, கூடியிருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது சன்னாசியப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேக விழாதஞ்சாவூர் மாவட்டம், ரெகுநாதபுரம் சன்னாசியப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகன் மற்றும் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாகள்ளக்குறிச்சி மாவட்டம், ஊராங்கண்ணி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாகாஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் பக்தி பரவச கோஷங்களிடையே நடந்தது. கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் ட்ரோன் மூலம் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது ஆழிமணிகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாசிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆழிமணிகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோட்டை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்சேலம் மாவட்டம் எடப்பாடி தாதாபுரம் கோட்டை மஹா மாரியம்மன், சொக்கநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாபுதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்ய நாதன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். Related Link ஒரு சவரன் தங்கம் விலை சுமார் ரூ.1.25 லட்சம்