மதுரையில் கொடுத்த கடனை திருப்பி கேட்டு, பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கந்து வட்டிக்காரரின் பகீர் ஆடியோ வெளியாகி உள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு 8 லட்ச ரூபாய் வரை வட்டி செலுத்திய பின்பும் பணம் கேட்டு நச்சரிப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாரளித்துள்ளார்.