கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணி அனுபவமின்றி புதிதாக பணிக்கு சேர்ந்த 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக நாசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாயீஸ் செனட் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.