news-tamil-logo

3/19/2026, 5:52:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய உச்சத்திற்கு சென்ற ஆபரணத் தங்கத்தின் விலை
tv

Also Watch

tv

Read this

புதிய உச்சத்திற்கு சென்ற ஆபரணத் தங்கத்தின் விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.318

Posted on: Jan 19, 2026 04:54 AM

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் இன்று ஜனவரி 19ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

புதிய உச்சம் தொடும் விலை
சர்வதேச நிலவரங்களால், இந்தியாவில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை ஜனவரி 17ஆம் தேதி, ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 310 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி...
இந்நிலையில், இன்று ஜனவரி 19ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலையும் புதிய உச்சம்
வெள்ளி விலையும் கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி விலை உச்சத்தால், நடுத்தர வர்க்கத்தினர், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 4 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved