அடுத்த விஜய் யார்? அவரது இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி நிலவி வருகிறது. தி கோட் படத்தில் ‘எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு நீங்க பார்த்துக்கோங்க’ என்று சிவாவிடம் விஜய் கூற, அதற்கு சிவாவும், ‘நீங்க போங்க சார் நான் பார்த்துக்கிறேன்’ என்பது போல் காட்சிகளும் வசனங்களும் இருந்தது. இதனால் அடுத்த விஜய் SK வா என்ற கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கிறது .இந்நிலையில் அமரன் பட புரோமோசனின் கலந்து கொண்டு பேசிய சிவாவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், ‘சினிமாவில் ஒரே தளபதி, ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே உலக நாயகன் தான் அவர்கள் இடத்தை யாரும் பிடிக்க முடியாது’. நான் அப்படியில்லை’’ என்று வெளிப்படையான பதில் அளித்திருந்தார்.இந்த நிலையில், தமிழ் சினிமாவில் அடுத்த விஜய் சிவகார்த்திகேயனா என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டதற்கு, ”அடுத்த தளபதியாக வருவதற்கு சிவாவுக்கு நிறைய தகுதிகள் உண்டு. நல்ல என்டர்டெயினர், நல்ல ஃபெர்பாமரா அமரன் படத்தில் வருகிறார். அவருக்கான பிசினஸ் கேரன்டியாக உள்ளது.எனவே அவருக்கு எல்லா தகுதிகளும் உண்டு.ஆனால் அவருக்கு முன்பே அந்த இடத்தில் பலர் உள்ளனர். அதனால், அந்த இடத்தை சிவா பிடிக்க இன்னும் 4 வருடங்கள் ஆகும் என்று கூறியுள்ளார்.