இந்தியாவுல இருக்குற நிறைய மாணவர்கள், வெளிநாட்டுல போயி படிக்குறத ஒரு கனவாவே வச்சிட்டு இருப்பாங்க. உள்நாட்டை காட்டிலும் வெளிநாடுகள்ல படிக்குற மாணவர்களுக்கு Exposure அதிகம் கிடைக்குது. அதே மாதிரி நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளும் அதிகளவில் இருக்கு. இதனாலேயே இந்திய மாணவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு உயர் படிப்புக்காக செல்வது வழக்கமா இருக்கு. குறிப்பா சொல்லணும்னா, வெளிநாடுகள்ல மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, கனடா ஒரு டாப் சாய்ஸா தான் இருந்துட்டு வருது. அதுக்கு காரணம் கனடாவுல உலகத் தரம் வாய்ந்த கல்வி, முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், பன்முகக் கலாச்சாரம் இப்படியான காரணங்களுக்காக, மாணவர்கள் கனடாவில் படிக்க அதிக ஆர்வம் காட்டி வர்றாங்க. இதுமட்டுமில்லாம அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள Compare பண்ணும்போது கனடாவுல கல்விக்கான செலவு ரொம்பவே கம்மியா இருக்கு. இதுவும் கனடா, டாப் சாய்ஸா இருக்குறதுக்கு ஒரு முக்கிய காரணமா இருக்கு. ஆனால், இப்போ இதுக்கு முட்டுக்கட்டை போடும் விதமா கனடா, கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 74 சதவீத இந்தியர்களின் கல்வி விசா விண்ணப்பங்களை Reject பண்ணியிருக்குறது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. 2023 ஆகஸ்ட் மாசத்துல வெறும் 32 சதவீதம் விசா மட்டுமே Reject ஆகியிருந்த நிலையில, இப்போ 74 சதவீத விண்ணப்பங்கள் Reject ஆகியிருக்குறது ஒரு Drastic உயர்வு தான்னு கல்வியாளர்கள் சொல்லிருக்காங்க. எதனால இந்த நிராகரிப்பு நடந்திருக்கு அப்படீன்னு பார்த்தோம்னா, கடந்த 2023ம் ஆண்டு, இந்தியாவுல இருந்து கனடாவுக்கு சுமார் 1,500 போலியான கல்வி விசா விண்ணப்பங்கள் வந்திருந்தத கண்டுபுடிச்சிருந்தாங்க. நிரந்தர குடியுரிமை சோதனை நடத்தியபோது, பல இந்தியர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செஞ்சு கல்வி விசா வாங்கியது தெரிய வந்துச்சு. திரும்பவும் இப்படி ஒரு சம்பவம் நடந்துற கூடாதுன்னு தான் இந்தியர்களோட Bank details-ல இருந்து கல்வி ஆவணங்கள் வரைக்குமே ரொம்ப கவனமா கனடா அரசு ஆய்வு செஞ்சிட்டு வர்றாங்க. இந்த அடிப்படையில தான் இப்போ 74 சதவீத விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதா சொல்லப்படுது. ஆனால், இந்த விசா நிராகரிப்புக்கு இது மட்டுமே காரணமா இருக்காதுன்னு சில ஆய்வாளர்கள் சொல்றாங்க. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு கனடாவின் சீக்கியப் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துல இந்தியாவோட தலையீடு இருப்பதா அந்நாட்டு முன்னாள் அதிபர் ஜஸ்டின் டுரூடோ (JUSTIN TRUDO) பகிரங்கமா ஒரு குற்றச்சாட்டு வைச்சாரு. ஆனா இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா, திரும்ப திரும்ப மறுப்பு தெரிவிச்சிது. அதுவரைக்கும் கனடா - இந்தியாவுக்கு நடுவுல ஒரு நல்ல Relationship Maintain ஆகிட்டு வந்த நிலையில, இந்த குற்றச்சாட்டுக்கு அப்பறம் விரிசல் விட தொடங்கிருச்சு. இப்போ இந்த காரணத்துக்காக தான் இந்தியர்களோட கல்வி விசாவை கனடா நிராகரிச்சிருக்குறதா சிலர் சொல்லிட்டு வர்றாங்க.