நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்.சி.பி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகள் புது கேப்டன்களுடன் களமிறங்குகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப் பண்டும், ஆர்.சி.பிக்கு ரஜத் படிதாரும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரகானேவும், டெல்லி அணிக்கு அக்சார் பட்டேலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.