news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர்
tv

Also Watch

tv

Read this

அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர்

சிம்ரன்ஜீத் கவுர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிம்ரன்ஜீத் கவுர்

உலகக் கோப்பை வில்வித்தை தொடர்:

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர் அரையிறுதியில் முன்னேறினார். ரிகர்வ் தனிநபர் பிரிவின் காலிறுதியில் தைவானின் போங் யூ ஹூவை((Pengyu Hu)) எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர், 6-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

மற்ற இந்திய வீராங்கனைகள் அங்கிதா போகத் 2-வது சுற்றிலும், தீபிகா குமாரி, கும்கும் மோஹோட்((Kumkum Mohod)) ஆகியோர் 4-வது சுற்றிலும் தோல்வி கண்டு வெளியேறினர்.

100 கோல்கள் அடித்து ரொனால்டோ புதிய சாதனை :

ரியாத்தில் நடைபெற்று வரும் சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் 100 கோல்கள் அடித்து நட்சத்திர வீரர் ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். லீக் ஆட்டத்தில் அல் ஹாபாப்-அல் நாசர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, 75ஆவது நிமிடத்தில் கோல் அடிக்கவே அந்த அணி 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளை சேர்த்து ரொனால்டோ ஒட்டுமொத்தமாக 971 கோல்களை அடித்துள்ளார்.

மெக்சிகோவில் ஜுன் 11 ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழா :

3 நாடுகள் நடத்தபடும் பிஃபா ((FIFA)) உலக கோப்பை போட்டியின் தொடக்க விழா 3 நாடுகளிலும் தனி தனியாக பிரமாண்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில் மெக்சிகோவில் ஜுன் 11 ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் கிராமி விருது வென்ற மெக்சிகன் பாப் இசைக்குழுவான மானா, அலெஜான்ட்ரோ பெர்னாண்டஸ் ((Alejandro Fernández)) மற்றும் பெலிண்டா ஆகியோரும் பங்கேற்கும் கலைஞர்களின் வரிசையில் ஒரு பகுதியாகப் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க வீரர் கோகோ காஃப் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் : 

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரர் கோகோ காஃப் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ரோம் நகரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜென்டினாவின் சொலானா சியர்ரா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கோகோ காப் 5க்கு 7, 6க்கு 0, 6க்கு 4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

போலி ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 4 பேர் கைது  :

லக்னோவில் போலி ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் டிக்கெட் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பிரதீப் சிங் என்ற நபர் 1000 ரூபாய் கொடுத்து ஒரு நபரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு, ஸ்டேடியத்திற்கு உள்ளே சென்றுள்ளார்.

அப்போது நுழைவுவாயிலில் பார்கோடை ஸ்கேன் செய்தபோது, அது போலி டிக்கெட் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர செளத்ரி, விஸ்வஜீத் சாஹு, ஸ்ரீகாந்த் போர்கார், நுதன் குமார் சாஹூ உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Link
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல்: முதலிடத்தில் SRH

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல்: முதலிடத்தில் SRH

                   
               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்யாவும், உக்ரைனும் 3 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்

1
39 mins agoshare
அதிபர் டிரம்ப் எச்சரிக்கை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved