மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.