கேரளாவில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு எதிராகவே கண்டனங்கள் வலுத்து வருகின்றன. எதேச்சையாக நடந்ததை இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் வேறு மாதிரி சித்தரித்து பெண் வீடியோ வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.ஓடும் பேருந்தில் வீடியோ எடுத்த மனோதத்துவ நிபுணர்அருகில் நிற்கும் ஆண் சபல நோக்கத்தில் அணுகுகிறார் என தெரிந்தும் விலகி செல்லாமல் வீடியோ எடுப்பதில் முனைப்பு காட்டும் பெண் தான் பல விவாதத்திற்கு தொடக்கப் புள்ளியாக மாறிஇருக்கிறார். கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 41 வயதான தீபக் என்பவர், கண்ணூர் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தீபக்கிற்கு அருகிலேயே இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஓடும் பேருந்தில் தீபக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மனோதத்துவ நிபுணரான அந்த இளம்பெண் வீடியோ வெளியிட்ட நிலையில், கேரளா மாநிலம் முழுவதும் வீடியோ தீயாக பரவியது. வீடியோவை பார்த்த பலரும் தீபக்கை திட்டுவதற்கு பதிலாக பாதிக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் பெண்ணையே குற்றம்சாட்டி வருகின்றனர்.வீடியோவால் வந்த வினை அந்த வீடியோவில், தீபக்கிற்கு அருகிலேயே இளம்பெண் நிற்கும் நிலையில், பெரிய அளவில் கூட்ட நெரிசல் இல்லாமல் தான் இருக்கிறது. மேலும், தீபக்கிற்கும், அந்த இளம் பெண்ணிற்கும் இடைவெளியும் இருக்கிறது. இந்த நிலையில், இறங்குமிடம் வந்ததும் தீபக் பேருந்தில் இறங்க முயற்சிக்கும் போது, அந்த பெண்ணாகவே தீபக்கிற்கு அருகே வந்து நிற்பது போல தான் இருக்கிறது. அப்போது தான், தீபக்கின் முழங்கை அந்த பெண் மீது தகாத இடத்தில் பட்டிருக்கிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாவில் ரீல்ஸாக வெளியிட்டு பேருந்தில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறவே, மன உளைச்சலுக்கு ஆளாகி அவமானம் தாங்க முடியாமல் இருந்த தீபக், வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. வீடியோ வெளியானதில் இருந்து அவமானப்பட்டு கூனி, குறுகி வீட்டுக்குள்ளேயே இருந்த தீபக், தனது படுக்கை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை நேரத்தில் வெகு நேரமாகியும் தீபக் எழுந்து வராததால் குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.என்ன மாதிரியான மன நிலைமை?தீபக்கின் தற்கொலை செய்தி தெரிய வந்ததில் இருந்து, ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. வெறும் 30 செகண்ட் ரீல்ஸ் வீடியோவால் உயிர் பறி போயிருக்கிறது என பெண்ணுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். மேலும் அந்த வீடியோவை டெலிட் செய்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரீல்ஸ் மோகத்தில் எதேச்சையாக பேருந்தில் நடக்கும் நிகழ்வை திட்டமிட்டு நடந்தது போல சித்தரித்து வீடியோ வெளியிட்டது குடும்பத்தின் ஆணிவேராக இருந்த தீபக்கின் உயிரை பறித்திருப்பதாக கருத்து முன் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட HONEY TRAP போல அருகில் நின்று, மோசமான நிகழ்வுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்து விட்டு, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடுவது என்ன மாதிரியான மன நிலைமை என்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகிறது. இனிமேலும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்இயற்கைக்கு மாறான மரணம் என கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பெண் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சட்டம் சாதகமாக இருக்கிறது என்பதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள முயன்ற அந்த பெண்ணுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பாலியல் சீண்டல், அத்துமீறல் எங்கு நடந்தாலும் தண்டிக்கப்பட, கண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அதையே FANTASY ஆக மாற்றி சோஷியல் மீடியா மோகத்திற்கு பயன்படுத்தும் வேலை, இனிமேலும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.இதையும் பாருங்கள் - தவெக தலைவருக்கு வந்த சிக்கல்