திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுப்பேன் என அண்ணாமலை கூறிய விவகாரத்தில், அவருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தை போர் முற்றியுள்ளது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரட்டும் என உதயநிதி கூறியிருந்த நிலையில், தனியாளாக அண்ணா சாலைக்கு வருகிறேன் என்றும், திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து பாருங்கள் எனவும் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர் காரணமாக, எக்ஸ் பக்கத்தில் ‘Get out Modi’ என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.