தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்திய ஓர் நேர்காணலில் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் குறித்து திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார். மனதளவில் மிகவும் சோர்வடைந்தேன்கடந்த டிசம்பர் 1, 2025 அன்று இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இல் நடைபெற்ற லிங்கா பைரவி விஷ்வா நிகழ்வில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்திய ஓர் நேர்காணலில் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா உடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு மனதளவில் மிகவும் சோர்வடைந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். “மீண்டும் ஒருவரை நம்புவது சாத்தியமே இல்லை என்று நினைத்தேன்” அந்த பிரிவு தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், “மீண்டும் ஒருவரை நம்புவது சாத்தியமே இல்லை என்று நினைத்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், ராஜ் நிடிமோவின் அன்பும் புரிதலும் தான் மீண்டும் வாழ்க்கையை நம்பச் செய்ததாக சமந்தா தெரிவித்தார். நான் மனதளவில் வலிமையானவளாக மாறியுள்ளேன்“அவரின் நட்பு என்னை மெதுவாக குணப்படுத்தியது. இன்று நான் மனதளவில் வலிமையானவளாகவும், முன்பைவிட நல்ல மனிதராகவும் உணர்கிறேன்” என்று உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.தற்போது, இருவரும் அமைதியான மற்றும் எளிய வாழ்க்கையை தேர்வு செய்து, ஒவ்வொரு விஷயத்தையும் சேர்ந்து அனுபவித்து வருகிறோம் என்றும் சமந்தா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டியின் மூலம், பிரிவு, உடல்நலப் பிரச்சினைகள், மீண்டெழுதல் மற்றும் புதிய உறவு என தனது வாழ்க்கையின் பல கட்டங்களை நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா. Related Link சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு