மாநிலங்களவையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தமக்கு சவக்குழி தோண்டப் பார்ப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, எதிர்க்கட்சிகள் குறித்து காட்டமான விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்.மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரைமக்களவையில், பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அவர் பேச ஆரம்பித்ததும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி உரைஅமளிக்கு மத்தியில் பேச தொடங்கிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது இல்லை என்றார். ஆனால், தனது தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள் என்றும் தங்களின் ஆற்றலில் கணிசமான பகுதி கடந்த காலத் தவறுகளைச் சரி செய்வதிலேயே செலவிடப்படுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அந்த காலகட்டத்தில், உலகின் மனதில் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அழிப்பதற்கு மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது என தெரிவித்த மோடி, அந்த அளவுக்கு காங்கிரஸ் பிரதமர்கள் சீரழிந்த நிலையில் நாட்டை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என கடுமையாக சாடினார். அதனால்தான் தாங்கள் எதிர்காலத்திற்குத் தயாரான கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்தார். எனக்கு சவக்குழி தோண்ட முடியாதுதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சீக்கியர்கள் மீது காங்கிரஸ் வெறுப்புணர்வை காட்டுவதாகவும், மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை துரோகி என ராகுல்காந்தி அழைத்ததை சகித்துக் கொள்ள முடியாது என ஆவேசமாக தெரிவித்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் தமக்கு எதிர்க்கட்சியினர் சவக்குழி தோண்ட பார்ப்பதாகவும், தமக்கு சவக்குழி தோண்ட முடியாது எனவும் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். மேற்குவங்கத்தில் கொடுங்கோல் ஆட்சிதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அதனுடன் அங்கம் வகித்துக்கொண்டு அக்கட்சிகள் தங்களது பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டதாக கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, மேற்குவங்கத்தில் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகவும் சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்க திரிணாமூல் காங்கிரஸ் நீதிமன்றம் சென்றதாகவும் குற்றச்சாட்டினார்.கார்கே அமர்ந்தபடியே முழக்கமிடுமாறு பிரதமர் மோடி பேச்சுபிரதமர் உரையின் நடுவே காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை பேச அனுமதிக்க வேண்டும், சீன ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பதிலளிக்கும்படியும் கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி, கார்கே-ஜியின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாமல் இருப்பதற்காக, அவரை அமர்ந்தபடியே முழக்கமிட அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரைக் கேட்டுக் கொள்வதாக கூறினார். பிரதமரின் பேச்சை கண்டு என்.டி.ஏ கூட்டணி எம்.பிக்கள் சிரித்து நகையாடினர். அவையில் இருந்து வெளிநடப்புபிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றிய நிலையில், கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இறுதிவரை, இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தோ, முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய சீன ஆக்கிரமிப்பு சம்பவம் குறித்தோ, எப்ஸ்டீன் கோப்பு குறித்தோ பிரதமர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.