மெலிசா(Melissa) புயல் கரையை கடந்த நிலையில், கரீபியன் தீவு நாடான ஹைத்தியில்(Haiti) குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். புயல் கரையை கடந்த போது, பலத்த காற்றுடன் கன மழையும் பெய்ததால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக, பொது மக்கள் அங்கிருந்து வெளியேறினர். மேலும், பலருடைய வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கியூபா; புயல் கரையை கடந்த நிலையில், கியூபாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால், பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு, மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், வீட்டின் மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டதால், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால், மக்கள் பாதுகாப்பாக, முகாமில் தங்க வைக்கப்பட்டனர். ஜமைக்கா; புயல் கரையை கடந்த நிலையில், கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. புயல் கரையை கடந்த போது சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், வீட்டின் மேற்கூரைகளும் சேதமடைந்தன. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.