தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக, திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்.கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு, குப்பை வண்டியில் உணவு கொண்டு சென்றதாக, தகவலை சுட்டிக்காட்டி பதிவு.இதுகுறித்து அதிமுக வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் பாருங்கள் - தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்துவதா?அதிமுக கடும் கண்டனம் | EPS | ADMK VS DMK