ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளில் ஈடுபட்ட தங்கள் வீரர்களையே ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக சித்திரவதை செய்து தூக்கிலிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை மீறிய உறவு, தன்பாலின ஈர்ப்பு, இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகள் ஆகியவற்றை ஹமாஸ் அமைப்பினர் கொடூரக் குற்றமாக கருதி தண்டனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.