எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த விருதான Great Honour Nishan of Ethiopia தமக்கு வழங்கப்பட்டதற்கு அந்த நாட்டின் பிரதமர் அபி அகமது அலிக்கும், எத்தியோப்பிய மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவில் பயணம் மேற்கொண்ட மோடிக்கு தலைநகர் அடிஸ் அபாபாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. தமக்கு விருது வழங்கப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, இது உலகின் மிகவும் பழமையான மற்றும் செழுமையான நாகரீகங்களில் ஒன்றான எத்தியோப்பியாவால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் எனவும் தெரிவித்துள்ளார். விருதை அனைத்து இந்தியர்களுக்கும் அவர் சமர்ப்பித்துள்ளார்.