Also Watch
Read this
By: Manigandan Raja
குடியரசு நாளை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்
நாடு முழுவதும் குடியரசு தின விழா
இன்று, நாடு முழுவதும் குடியரசு தின விழா உற்சாகத்துடன் கொண்டப்பட்டது. சென்னை, மெரினாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மெரினாவில் குடியரசு தின விழா
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமாஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
பின்னர் ராணுவ படைப் பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசு இசைப் பிரிவு, வான்படை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் பின்னர், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் துணை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved