ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் பிளேயின் 11ல் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பெரும் விவாதமாக மாறியது. வாஷிங்டன் சுந்தரின் பவர் ப்ளே பவுலிங், மிடில் ஓவர் பவுலிங், மற்றும் பின் வரிசை பேட்டிங்கை பயன்படுத்த குஜராத் தவறவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுக்காதது தமக்கு கூட ஆச்சர்யமாக இருப்பதாக எக்ஸ் தள பக்கத்தில் சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார்.