மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டபோது ஆர்ஜி.கர். மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்ட நிலையில், இரவோடு இரவாக அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண் மருத்துவர் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததோடு, ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 15 நாட்களாக சந்தீப் கோஷிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், மருத்துவக் கல்லூரியில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, சந்தீப் கோஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, CBI அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கு இரவோடு இரவாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.