news-tamil-logo

3/18/2026, 11:53:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home news காதலிக்காக... மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
tv

Also Watch

tv

Read this

காதலிக்காக... மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

லக்னோ, உத்தர பிரதேசம்

Posted on: Feb 09, 2026 10:09 AM

49

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மனைவி கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸ். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் வசமாக சிக்கிய கணவன். மனைவியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம். கட்டிய மனைவி கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

மனைவியின் சகோதரருக்கு ஃபோன் செய்த தீப்குமார் சிங்
டிசம்பர் 29ம் தேதி. இளைஞர் பானு பிரதாப் சிங்கிற்கு ஃபோன் ஒன்னு வந்துருக்கு. அப்ப எதிர்முனையில பேசுன தங்கையின் கணவர் தீப்குமார் சிங், உங்க தங்கச்சியும் நானும் பைக்ல ஊருக்கு போய்ட்டு இருந்தோம், அப்ப உங்க தங்கை ஒரு கால்வாய்ல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லிருக்காரு. இதகேட்டு பதறிப்போன சகோதரர் உடனே சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு போய்ருக்காங்க. அப்ப தங்கை பூனம் சடலமா கிடந்தத பாத்த சகோதரர் கதறி அழுதுருக்காரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு கணவர் தீப் குமார் சிங் கிட்ட விசாரணையில இறங்குனாங்க. இந்த சம்பவம் எப்படி நடந்துச்சுன்னு போலீஸ் கணவன் கிட்ட கேட்ருக்காங்க. அதுக்கு தீப்குமார் சிங், எனக்கும் என் மனைவிக்கும் இடையில எந்த ஒரு பிரச்னையும் ஏற்படல, நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா பைக்ல வந்துட்டு இருந்தோம், ஆனா திடீர்ன்னு என் மனைவி கால்வாய்ல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்லிருக்காரு.

பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸ்
இதகேட்ட போலீஸ், தற்கொலை வழக்கா பதிவு பண்ணி விசாரிச்சுட்டு இருந்தாங்க. இதுக்கிடையில அடுத்த கொஞ்சம் நாட்கள்லையே போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வெளியாகிருக்கு. அதுல பூனம் தண்ணீர்ல மூழ்கி உயிரிழக்கலைனும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாங்கன்னும் பதிவாகியிருந்துருக்கு. இதனால கணவன் மேல சந்தேகம் அடைஞ்ச போலீஸ் அவர கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. அதுல தான் பூனம் எதற்காக கொலை செய்யப்பட்டாங்க, அவங்கள கொடூரமா கொலை செஞ்சது யாருன்னு தெரியவந்துச்சு.

Related Link
வீட்டிற்கு அழைத்த காதலி, காத்துக் கொண்டிருந்த எமன்

வீட்டிற்கு அழைத்த காதலி, காத்துக் கொண்டிருந்த எமன்

தீப்குமார் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம்
உத்தர பிரதேசத்துல உள்ள லக்னோ நகர சேந்தவரு தொழிலதிபர் தீப் குமார் சிங். இவரு கட்டுமான பொருட்கள வியாபாரம் செஞ்சுட்டு இருக்காரு. இவருக்கு பூனம்-ங்குற மனைவி இருந்தாங்க. கல்யாணமாகி கொஞ்சம் நாட்கள் மட்டும் சந்தோஷமா வாழ்ந்த இந்த ஜோடிக்குள்ள அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. இதனால பூனம் தன்னோட தாய் வீட்டுக்கு போய்ட்டு வசிக்க ஆரம்பிச்சுருக்காங்க. இதனால மனைவி பிரிஞ்சு போன சோகத்துல இருந்த கணவன், அவங்கள சமாதானப்படுத்தி, கூப்டு வந்து ஒன்னா வாழ ஆரம்பிச்சுருக்காரு. ஆனா அப்பவும் ரெண்டு பேருக்கு இடையில ஒத்து வரல. இதுக்கிடையில தீப்குமார் சிங்கிற்கும் அதே பகுதியை சேந்த பெண் ஒருத்தங்க கூட பழக்கம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் பீச், பார்க், ஓட்டல்ன்னு ஜாலியா ஊர் சுத்திட்டு இருந்துருக்காங்க. இதனால மனைவி கூட பேச்சுவார்த்தைய குறைச்சுக்கிட்ட கணவன் ஃபோனே கதின்னு கிடந்துருக்காரு.

பைக்கில் வேறொரு பெண்ணுடன் சென்ற கணவன்
இதனால குடும்பத்துக்குள்ள அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுருக்கு. சில நாட்களுக்கு முன்னாடி கணவர் வேலைக்கு கிளம்பி போய்ருக்காரு. அப்ப மனைவி வீட்டுக்கு தேவையான பொருட்கள வாங்க பக்கத்து உள்ள கடைக்கு போய்ருக்காங்க. அந்த நேரத்துல கணவர் ஒரு பெண் கூட பைக்ல போனத பாத்து அதிர்ச்சியடைஞ்ச பெண், அவரு வீட்டுக்கு வந்த உடனையே அதபத்தி கேட்டு சண்டை போட்ருக்காங்க.

தொடர்ந்து காதலியுடன் பழகி வந்த கணவன்
இதகேட்ட கணவன், முதல்ல ப்ரண்டு, தெரிஞ்ச பொண்ணுன்னு பொய் சொல்லிருக்காரு. ஆனா மனைவி விடாம கேட்டு சண்டை போட்டதால கோபமான கணவன் நானும் அந்த பொண்ணும் லவ் பண்ணிட்டு இருக்கோம், நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லிருக்காரு. கணவனோட பேச்ச கேட்டு நொந்து போன மனைவி, தன்னோ சகோதரனுக்கு ஃபோன் பண்ணி, என் கணவன் வேறஒரு பெண் கூட தகாத உறவுல இருக்கான், இவனால என் வாழ்க்கையே இப்ப வீணாகிருச்சுன்னு அழுதுருக்காங்க. இதனால தீப்குமார் சிங்குக்கு ஃபோன் பண்ணி சண்டை போட்டுட்டு அவருக்கு அறிவுரை சொல்லிருக்காரு பூனத்தோட சகோதரர். ஆனா அத காது கொடுத்துக்கூட கேட்காத தீப்குமார் சிங் தொடர்ந்து அந்த பெண் கூட பழகிட்டு இருந்துருக்காரு. இதனால கணவன் - மனைவிக்கு இடையில தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுட்டே இருந்துருக்கு.

தீப்குமார் சிங்கை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்
அதே மாதிரி காதலிச்ச பொண்ண, திருமணம் பண்றதுக்கு மனைவி தடையா இருந்ததால அவங்கள கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு தீப்குமார் சிங். இந்த திட்டத்துல தன்னோட நண்பர் ஒருத்தரையும் கூட சேத்துக்கிட்டாரு. சம்பவத்தன்னைக்கு மனைவிய கூப்டுட்டு கணவன் பைக்ல வெளியூருக்கு போய்ட்டு இருந்தாரு. அப்ப பாதி தூரம் வந்தப்ப, இந்த விவகாரம் தொடர்பா மறுபடியும் கணவன் - மனைவிக்கு இடையில பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. அப்ப வாகனத்த நிறுத்துன கணவன், மனைவிய போட்டு சரமாரியா அடிச்சு கழுத்த நெரிச்சுருக்காரு. அடுத்து அவங்கள தரதரன்னு இழுத்துட்டு போய்ட்டு முகத்த கால்வாய்க்குள்ள மூழ்கடிச்சு மூச்சு திணறல் ஏற்பட வச்சு துடிக்க துடிக்க கொன்னுருக்காரு. அடுத்து தன்னோட மனைவி கால்வாய்க்குள்ள விழுந்து உயிரிழந்துட்டதா நாடகமாடிருக்காரு. ஆனா பிரதே பரிசோதனை ரிப்போர்ட் மூலமா வசமாக சிக்குன தீப்குமார் சிங்க போலீசார் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
பழைய ஓய்வூதியத் திட்டம் பறிப்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான்...

பழைய ஓய்வூதியத் திட்டம் பறிப்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான்...

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 6 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved