கர்நாடக மாநிலம் மங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.