ஆந்திர மாநிலத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொண்ட அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.