புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக அரசின் கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை வைத்து தமிழகம் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டியதோடு, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழக அரசு மட்டும் மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.