புதிதாக அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருப்பதாகவும், அதன் மூலம் தனது வருமானத்தின் 10 சதவீதத்தை மக்களுக்கு வழங்க இருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். வெற்றியையும், முயற்சியையும் ஒரு போதும் கைவிடாமல் தொடர்ந்து சிரிக்க வேண்டும் என்பதே தாம் வாழ்க்கையில் கற்று கொண்ட பாடம் எனவும், இதனை மக்களின் முகத்தில் கொண்டு வருவதே தமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.