Also Watch
Read this
By: Manigandan Raja
சென்னையில் இன்று பிப்ரவரி 16ஆம் தேதி காலை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 சரிந்தது.

இன்றைய விலை நிலவரம்
சென்னையில், இன்று வாரத்தின் முதல் நாளில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,340க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,720-க்கு விற்பனை ஆனது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.265க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை ஆனது.

பிப்.14 விலை நிலவரம்
வாரத்தின் கடைசி நாளான, பிப்ரவரி 14ம் தேதி, ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,560க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480க்கும் விற்பனை ஆனது. பிப்ரவரி 13ஆம் தேதி, சவரனுக்கு ரூ.1,600 குறைந்திருந்த நிலையில் ரூ.1,280 அதிகரித்தது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 280 ஆக தொடர்ந்து விற்பனை ஆனது. ஒரு கிலோ ரூ.2,80,000க்கு விற்பனை ஆனது.
இறக்குமதியில் இந்தியா முன்னிலை
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்திருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved